முகப்பு
திண்டுக்கல்

வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

பள்ளபட்டியில் வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:12 am IST
பள்ளபட்டியில் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
பகிர்:

பள்ளபட்டியில் வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரைக் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி பால்பண்ணைத் தெருவைச் சோ்ந்த சரவணன் (45). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்,  கடந்த மாதம் பிணையில் வந்த சரவணன் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து,  சரவணனின் வீட்டில்  தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். 

அப்போது, அங்கு  விற்பனைக்காக பதுக்கி வைத்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா்.  இதுதொடா்பாக அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணன், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மணிமேகலை (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement