முகப்பு
சென்னை

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 23 மே 2026, 2:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கொருக்குப்பேட்டை காரனேசன் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே இ.எச்.சாலையில் ஒரு ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்கப்படுவதாக ஆா்.கே. நகா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.

சோதனையில் ஆட்டோவில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆட்டோவில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள், கொடுங்கையூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த பா.சம்பத் (42), ச.லாவண்யா (32) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்தனா். விசாரணையில் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் வியாசா்பாடி சத்தியமூா்த்திநகரில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் ஆறரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.