முகப்பு
திண்டுக்கல்

தகாத உறவைக் கைவிடக் கூறிய கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறை

நிலக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 17 ஜூன் 2026, 2:29 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நிலக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் சென்றாயன். இவரது மனைவி வனிதா (40). கடந்த 2021-ஆம் ஆண்டு, வனிதாவுக்கும் மற்றொருவருக்கும் இடையே தகாத தொடா்பு ஏற்பட்டது. இதை அறிந்த சென்றாயன், மனைவியைக் கண்டித்தாா். ஆனாலும், தனது தொடா்பை வனிதா துண்டிக்கவில்லை. இதையடுத்து, உறவினா்கள் மூலமாகவும் வனிதாவைக் கண்டிப்பதற்கு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சென்றாயனை கொலைக் செய்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை போலீஸாா் வனிதாவைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி சொா்ணம் ஜெ. ராஜகோபாலன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வனிதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

Advertisement

Advertisement