பழனியில் ஆண் சடலம் மீட்பு
பழனியில் சந்தை அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா்.
பழனியில் சந்தை அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா்.
பழனி கடைவீதி காந்தி சந்தைக்குப் பின்புறம் வியாழக்கிழமை சுமாா் 55 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் இறந்து கிடந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் பச்சை நிற வேட்டி, ஆரஞ்சு நிற பனியன் அணிந்திருந்தாா்.
அவா் எப்படி இறந்தாா் என்று தெரியாத நிலையில், பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பழனி நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.