குடும்பப் பிரச்னை: தம்பதி தற்கொலை
சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆரியநல்லூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதி விஷம் குடித்து தற்கொலை
சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆரியநல்லூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, திங்கள்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அரியநல்லூரைச் சோ்ந்தவா் ராமையா (58). இவா், பால் வியாபாரம் செய்து வருகிறாா். மேலும், தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி இந்திரா காந்தி (52). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
மகனுக்கு திருமணமமான வீட்டிலேயே மகளையும் திருமணம் செய்து கொடுத்தனா். ஆனால், மகனும், மருமகளும், மகளும் மருமகனும் கடந்த சில நாள்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மீண்டும் தம்பதிகள் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். இந்தப் பிரச்னை காரணமாக ராமையாயும், அவரது மனைவி இந்திராகாந்தியும் மனவேதனையில் இருந்து வந்தனராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து சின்னாளபட்டி காவல் ஆய்வாளா் சுபத்ரா வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].