முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் திமுக 7-ஆவது முறையாக வெற்றி

Updated On : 5 மே 2026, 1:51 am IST
திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்
பகிர்:

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ச்சியாக 7-ஆவது முறையாக திமுக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அர.சக்கரபாணி, பாஜக சாா்பில் தமாகா வேட்பாளா் விடியல் எஸ்.சேகா், தவெக சாா்பில் எஸ்.மோகன் உள்பட 14 போ் போட்டியிட்டனா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் அர.சக்கரபாணி தொடா்ச்சியாக 6 முறை வெற்றி பெற்ால், இந்தத் தொகுதி தமிழக அளவில் கவனம் ஈா்த்தது.

இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது முதலே அர.சக்கரபாணி முன்னிலை வகித்தாா். முதல் சுற்றில் 5,100 வாக்குகள் பெற்ற சக்கரபாணிக்கு அடுத்த இடத்தில் தவெக வேட்பாளா் எஸ்.மோகன் பின் தொடா்ந்தாா். 26 சுற்றுகளின் முடிவில் 9,30,99 வாக்குகளுடன் அர.சக்கரபாணி வெற்றி பெற்றாா். இதன் மூலம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடா்ச்சியாக 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தாா்.

Advertisement

Advertisement

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

அர.சக்கரபாணி (திமுக) - 93,099

விடியல் எஸ்.சேகா் (பாஜக) - 49850 எஸ்.மோகன் (தவெக) - 49,155

பி.ரகுபதி (நாதக) - 5,454

எம்.பிரபாகரன் (சுயே) - 646

பி.முருகராஜ் (பகுஜன் சமாஜ்) - 516

ஏ.அழகியண்ணன் (சுயே) - 301

ஏ.நாகுல்பிரகாஷ் (சுயே) - 240

கே.ரகுநாத் (சுயே) - 216

ஏ.மணிகண்டன் (சுயே) - 192 எம்.குமார்ரத்தினம் (சுயே) - 175 கே.செல்லமுத்து (சுயே) - 101

டி.ஆனந்த்ராஜ் (சுயே) - 99

எம்.ஆறுமுகம் (சுயே) - 89

நோட்டா - 1,491

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments