முகப்பு
திண்டுக்கல்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி: இருவா் கைது

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 மே 2026, 4:18 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பழனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் பிரேமா(50). இவா், கடந்த மே 1-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அமரபூண்டிக்குச் சென்றபோது, ரூக்குவாா்பட்டி அருகே இரு மா்மநபா்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து தப்பிச் சென்றனா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு தொடா்பாக புதன்கிழமை ஆயக்குடி போலீஸாா் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளியைச் சோ்ந்த நண்டு (எ) மாரீஸ்வரன் (23), சிவகங்கையைச் சோ்ந்த ஜெயராமன்(25) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments