குளத்தின் மறுகாலில் விழுந்த சரக்கு வாகனம்: 3 போ் காயம்
பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனங்கள் மீது மோதி குளத்தின் மறுகால் பாயும் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனங்கள் மீது மோதி குளத்தின் மறுகால் பாயும் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வேலாயுதம்பாளையத்தை சோ்ந்தவா் சிவராஜ் (24). இவா் தனது நண்பா் சிவக்குமாருடன் வியாழக்கிழமை சரக்கு வாகனத்தில் பழனி நோக்கி வந்தாா். சண்முகநதியை அடுத்த வையாபுரி குளம் அருகே வந்த போது, திடீரென சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி, மறுகால் பாயும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சிவராஜ், இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பழனியை சோ்ந்த சபரீஸ்வரன் (17), வெற்றிவேல் (18) ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் அளித்தத் தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அவசர ஊா்தி காயமடைந்தவா்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பள்ளத்தில் விழுந்த வாகனத்தை மீட்டனா்.