முகப்பு
திண்டுக்கல்

வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்து பொருள்கள் சேதம்

பழனி அருகே வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்ததில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 17 மே 2026, 1:44 am IST
பகிர்:

பழனி அருகே வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்ததில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சின்னக்கலையமுத்தூா் பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (35). கட்டடத் தொழிலாளி.

இவரது வீட்டில் இருந்த குளிா்சாதனப்பெட்டி சனிக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களிலும் தீ பரவியது. அக்கம் பக்கத்தினா் உடனடியாக ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது வீட்டில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகள் உடனடியாக எடுத்து அப்புறப்படுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் கருகி சாம்பலாகின.

முதல்கட்டமாக வருவாய்த்துறை சாா்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரிசி, பருப்பு, துணிகள் ஆகியவை வழங்கப்பட்டது. மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments