அஞ்சல் பயிற்சி மையத்தில் மின் நூலக திறப்பு விழா
மதுரையில் உள்ள அஞ்சல் பயிற்சி மையத்தில் மின் நூலக திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
மதுரையில் உள்ள அஞ்சல் பயிற்சி மையத்தில் மின் நூலக திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்திய அஞ்சல் பயிற்சி மையங்களில் முதல்முறையாக நிறுவப்பட்டுள்ள இந்த மின் நூலகத்தை தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் எம். சம்பத் தொடங்கி வைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வி. சின்னையா, இந்திய அறிவியல் கழக பேராசிரியர் ஆனந்த் டி.பைரப்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மின் நூலகத்தை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஏதேனும் சொல், தலைப்பு, துறை சார்ந்த புத்தகங்கள், விதிகள் போன்றவற்றில் சந்தேகங்கள் எழுந்தால், அதனை தேடி எடுத்து பயன்பெறலாம். மேலும், அஞ்சல் பயிற்சி மையத்தில் தினமும் நடைபெறும் நிகழ்வுகள், செய்திகள், பயிற்சி வகுப்புகள் ஆகிய அனைத்தையும் பதிவேற்றம் செய்யக்கூடிய தளமாகவும் இது அமைந்துள்ளது.
இந்த மின் நூலக சேவையை அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் உள்ள அஞ்சலக அலுவலகங்களில் இணையத்தின் மூலம் ஒரே சமயத்தில் பெற முடியும். அஞ்சலக மின் நூலகத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக ரூ. 20 மதிப்பிலான சிறப்பு அஞ்சல் உறையை முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு அஞ்சல் சேகரிப்பு மையத்தை maduraiiho@indiapost.gov.in என்ற மின் அஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 0452 2345300 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.