மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 15 மாநிலங்களின் கைத்தறி துணிகள் விற்பனை
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 15 மாநிலங்களின் கைவினைஞர்கள் பங்கேற்றுள்ள கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 15 மாநிலங்களின் கைவினைஞர்கள் பங்கேற்றுள்ள கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
15 மாநிலங்களில் இருந்து 125 கைவினைஞர்கள் தாங்கள் தயாரித்துள்ள பொருள்களை 160 அரங்குகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
லக்னௌவில் இருந்து சுடிதார் சேலைகள், குர்தா பைஜாமா, மேலாடைகள் போன்றவை இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குஜாரத் எத்னிக் பிரிண்ட் குர்தீஸ், மெட்டீரியல், பிளாக் பிரிண்ட் டிரஸ் மெட்டீரியல், கோட்டாதொரியா துணி ரகங்கள், சோளி, பந்தேஜ் சூட்ஸ், ராஜஸ்தான் ஆடைகள், பஞ்சாப் பாட்டியாலா புல்காரி ஆடை ரகங்கள், மத்திய பிரதேசத்தின் சந்தேரி சல்வார், மகேஸ்வரி சல்வார், பிளாக்பிரிண்ட் உள்ளிட்டவையும் விற்கப்படுகின்றன.
காந்தி நிகேதன் ட்ன்ட் சேலை, காந்தா சேலைகள் மேற்கு வங்கத்தின் சிபான் மற்றும் கிரேப் சேலைகள், ஒடிசாவின் சம்பல்புரி இக்கத் சேலைகள், கத்வால் ஜரிகை, பார்டர் டிரஸ் மெட்டீரியல், மதுரை சேலைகள், ஹிமாச்சல பிரதேசத்தின் குர்தீஸ், உத்தரபிரதேச பனாரஸ் சில்க், காட்டன் சேலைகள், சத்தீஸ்கர் சில்க் சேலைகள், ராஜஸ்தான் ஸ்டோன் நகைகள், தில்லி பேன்சி நகைகள், வீடுகளை அலங்கரிக்கும் கலைப்பொருள்களும் கிடைக்கின்றன. இக்கண்காட்சி வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சி மற்றும் விற்பனையில் அனுமதி இலவசம். தினசரி காலை 10.30 முதல் இரவு 9 வரை அரங்குகளை பார்வையிடலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.