மக்களவைத் தேர்தலுக்கும், ஜிஎஸ்டி குறைப்புக்கும் தொடர்பில்லை: தமிழிசை செளந்தரராஜன்
மக்களவைத் தேர்தலுக்கும் ஜி.எஸ்.டி. குறைப்புக்கும் தொடர்பில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கும் ஜி.எஸ்.டி. குறைப்புக்கும் தொடர்பில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
பல்வேறு வியாபார அமைப்புகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளின் அடிப்படையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டியை குறைத்துள்ளது. இதற்கும் மக்களவை தேர்தலுக்கும் தொடர்பில்லை. காங்கிரஸ் கட்சி இலங்கையில் தமிழர்களை சுட்டுக் கொன்றது. ஆனால், பாஜக யாழ்ப்பாணத்துக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பளித்துள்ளது. மக்களவைத் தேர்தலின்போது தான் கூட்டணி குறித்து கூறமுடியும். மக்களவையில் அதிமுக, பாஜகவை ஆதரித்ததில் தவறில்லை. மத்திய அரசின் நிதி மூலம் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கும் என்றார்.
விமான நிலைய மேலாளருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்: மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை வரவேற்க, அக்கட்சி நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது அங்கு கார் நிறுத்துவது மற்றும் உள்ளே செல்வதற்கு பாஸ் வாங்குவது தொடர்பாக விமான நிலைய மேலாளர் ரவிச்சந்திரனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, விமானநிலைய அலுவலர்கள் சமாதானப்படுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.