மதுரை அருகே விபத்தில் மகன் சாவு: தந்தை காயம்
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் அழகன் (55). இவர் காரைக்குடியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுப்பையன் (36) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் காரைக்குடியல் பணியாற்றிய அழகன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் செல்வதற்காக வலசை கிராமத்தில் இருந்து அவரது மகன் சுப்பையன் (26) இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தார். தந்தை அழகன் வந்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வலசைக்கு சென்றுள்ளார். மாலைப்பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற எம்.சத்திரப்பட்டி போலீஸார் பலத்த காயம் அடைந்த அழகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.