முகப்பு
மதுரை

சர்வதேச இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக இதய தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில்  மதுரை ரயில் நிலையம்  

Updated On : 8 அக்டோபர் 2018, 8:02 am IST
பகிர்:

உலக இதய தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில்  மதுரை ரயில் நிலையம்  மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்தை சிகப்பு விளக்குகளால் அலங்கரித்து விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
சர்வதேச இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ஒரு வார கால விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதயம் தொடர்பான  நோய்கள் மற்றும்  சிக்கல்களை பொதுமக்கள் உணரும் வகையில் மதுரை ரயில் நிலையம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகங்கள் சிகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக  மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் எஸ்.குருசங்கர் கூறியது: இதய சிக்கல்கள் எந்த வயதிலும் ஏற்படாலம்.  நமது வாழ்க்கை முறைகள் தொடர்ந்து மாறிவருவதால், இதயநோய் இடர்ப்பாடுகள், இளம் தலைமுறையினர் மத்தியில் நிலையாக அதிகரித்து வருகிறது. இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தொடர்ந்து செயலாற்றி வருகிறது. 
 அதன் ஒரு பகுதியாக  மதுரை ரயில்வே சந்திப்பு மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகங்களை ஒரு வார காலம் சிகப்பு விளக்குகளால் அலங்கரித்துள்ளோம். மேலும் இலவச இதய பராமரிப்பு முகாம்களையும்  நடத்துகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.