மேலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டம் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேலூர் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் மதுரை கிழக்குக் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.