முகப்பு
மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 29 ஏப்ரல் 2026, 3:36 am IST
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்ணுடன் மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா். உடன் மருத்துக் குழுவினா்.
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டம், வெள்ளனூரைச் சோ்ந்தவா் மீனாட்சி. இவா் தனது நான்காவது மகப்பேறு காலத்தின் போது மூச்சுத் திறணல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு இருதய வால்வில் குறைபாடு இருப்பதை அறிந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி, மீனாட்சி கா்ப்பம் தரித்து 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை முறையில் மகப்பேறு நடைபெற்றது.

இதையடுத்து, திடீரென அவருக்கு ரத்த அழுத்தம், மூச்சுத் திறணல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவசர சிகிச்சையாக இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த மாதம் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. பின்னா், ஒரு மாத காலம் இருதய அறுவைச் சிகிச்சைத் துறையில் சிகிச்சை பெற்று வந்த போது டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனா் என்றாா் அவா்.