முகப்பு
மதுரை

அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரையை சீரமைக்க வலியுறுத்தல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 14 மே 2026, 5:25 am IST
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரை.
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.313.25 கோடியில் 6 தளங்களுடன் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை கடந்த 2024, பிப்ரவரியில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். 22 உயா் தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடம், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கட்டடத்தின் இருதயவியல் துறையின் உள் நோயாளிகள் பொதுப் பிரிவு பகுதியின் அலங்கார மேற்கூரை புதன்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள அலங்கார மேற்கூரைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த மேற்கூரையை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement