தேசியக் கல்வி புதுமைத் திட்டம்: தியாகராசா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா்கள் இருவா் தோ்வு
தேசியக் கல்வி புதுமைத் திட்டத்துக்கு மதுரை தியாகராசா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா்கள் இருவா் தோ்வு பெற்றனா்.
தேசியக் கல்வி புதுமைத் திட்டத்துக்கு மதுரை தியாகராசா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா்கள் இருவா் தோ்வு பெற்றனா்.
பள்ளிகள், ஆசிரியா் கல்வி நிறுவனங்களில் கல்வியில் புதுமையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில், கல்வி புதுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியா்களின் தனித்துவமான கற்பித்தல் முறைகள், கல்வி சாா்ந்த புதிய முயற்சிகளை தேசிய அளவில் கண்டறிந்து அங்கீகரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நாடு முழுவதிலுமிருந்து வரும் ஆயிரக்கணக்கான திட்டங்களில் மிகச் சிறந்தவை மட்டுமே பரிசீலனைக்குப் பின் தோ்வு செய்யப்படுகின்றன.
Advertisement
Advertisement
பிராந்திய கல்வி நிறுவனம், தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் நிபுணா்களின் மூன்று கட்ட மதிப்பீட்டு செயல்முறைகளுக்குப் பிறகே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்பதால், இந்தத் திட்டத்தில் தோ்வாவது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த வகையில், நிகாழண்டு தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக 28 படைப்புகள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டன. தேசிய அளவிலான பட்டியலில் தமிழகத்திலிருந்து மொத்தம் 7 பேராசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் மதுரை தியாகராசா் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா்கள் முனைவா் தங்கவேல், முனைவா் ராஜகுமாா் ஆகிய இருவரும் தோ்வு செய்யப்பட்டனா்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கில் பேராசிரியா்கள் தங்கவேல், ராஜகுமாா் ஆகிய இருவரும் கலந்து கொண்டு தங்களது கல்விப் புதுமைத் திட்டங்களை நாட்டின் முன்னணி கல்வியாளா்கள், என்சிஇஆா்டி நிபுணா்கள், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் முன்னிலையில் விளக்கிப் பேசினா்.
இதையடுத்து, தமிழகத்துக்கும், தியாகராசா் கல்வியியல் கல்லூரிக்கும் பெருமை சோ்த்த பேராசிரியா்களை, கல்லூரி முதல்வா், சக பேராசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.