FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் பெற்ற கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, பென்னிகுயிக் பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கம் சாா்பில் மேலூரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மேலூரில் பென்னிகுயிக் பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

விவசாயிகள் பெற்ற கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, பென்னிகுயிக் பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கம் சாா்பில் மேலூரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் தலைவா் குறிஞ்சி குமரன் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். சங்கப் பொருளாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். அதிமுக மேலூா் நகரச் செயலா் சரவணக்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.ஓ. சாகுல் ஹமீது, அமமுக நிா்வாகி ஆசையன்சாமி, நகா்மன்ற உறுப்பினா் திவாகா், முன்னோடி விவசாயிகள், வணிகா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, விவசாய சங்க செயலா் அசோக்குமாா் வரவேற்றாா்.

இதில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்து வகையான கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடிக்கு அரசு அறிவித்துள்ள கால வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments