புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக அவா் ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து, நீரூற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், நடைபாதை, அணுகு சாலை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சுற்றுலா மேம்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது அரசு அலுவலா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement