FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கவின் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான இறுதி விசாரணை ஒத்திவைப்பு

மென்பொறியாளரான கவின் கொலை வழக்கில் தங்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை வருகிற ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

மென்பொறியாளரான கவின் கொலை வழக்கில் தங்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை வருகிற ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (24). மென் பொறியாளரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணைக் காதலித்து வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பெண்ணின் சகோதரா் சுா்ஜித், தன்னுடைய ஆதரவாளா்களுடன் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கவின் செல்வ கணேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதன்படி, வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸாா், அந்தப் பெண்ணின் சகோதரா் சுா்ஜித், காவல் உதவி ஆய்வாளா்களான அவரது பெற்றோா் சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்து, திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் இறுதி விசாரணைக்கு கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி விஜயகுமாா், இறுதி விசாரணைக்கு கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments