நெல் கொள்முதல் நிலையங்களில் முகவா்கள், இடைத்தரகா்கள் தலையீட்டை தடுக்கக் கோரிய மனு தள்ளுபடி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முகவா்கள், இடைத்தரகா்கள் தலையீட்டை தடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முகவா்கள், இடைத்தரகா்கள் தலையீட்டை தடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த தங்கசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததாலும், இடைத்தரகா்களின் தலையீட்டால் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்தாலும் சிறு, குறு நெல் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முகவா்கள், இடைத்தரகா்களின் தலையீட்டை முற்றிலுமாக ஒழிக்கவும், சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் நிபுணா் குழுவை அமைத்து, தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப செலவுகளோடு 50 சதவீதம் லாபம் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களை மனுதாரா் சமா்ப்பிக்கவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.