முகப்பு
மதுரை

எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதற்காக கடவுச்சீட்டு வழங்க மறுக்கக் கூடாது: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு என்ற ஒரு காரணக்காக, கடவுச் சீட்டு வழங்குவதை மறுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 27 ஜூன் 2026, 12:42 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு என்ற ஒரு காரணக்காக, கடவுச் சீட்டு வழங்குவதை மறுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த சதீஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சியில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி புதிய கடவுச் சீட்டு வழங்கக் கோரி விண்ணப்பித்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நீண்ட காலமாகப் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது. எனவே, எனது விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து, கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கௌடா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரா் மீது திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு குற்றவியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எப் ஐ ஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளதால், கடவுச் சீட்டு விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

விண்ணப்பதாரருக்கு எதிரான குற்றவியல் வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் மட்டுமே கடவுச் சீட்டு வழங்க மறுக்க முடியும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டும் கடவுச் சீட்டு வழங்குவதற்குத்

தடையாக இருக்காது. மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதற்காக, மனுதாரரின் கடவுச் சீட்டு விண்ணப்பத்தை நிலுவையில் வைத்திருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.

எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை விதிமுறைகளின்படி பரிசீலித்து, பிற தகுதிகள் அனைத்தும் சரியாக இருந்தால், அவருக்கு புதிய கடவுச் சீட்டை திருச்சி மண்டல கடவுச் சீட்டு அலுவலா் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments