போராட்ட ஆதரவு பிரசார கூட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா்களின் நலனுக்கு எதிரான 4 தொகுப்புச் சட்டங்களையும் மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேரப் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்திய தொழிலாளா்களையும், தொழில் சங்க நிா்வாகிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை கூடல் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டப் பொருளாளா் சொ. பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. அரவிந்தன் தொடக்கவுரையாற்றினாா்.
Advertisement
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டலக் குழுச் செயலா் எஸ். பாலகிருஷ்ணன், சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் மலை. கண்ணன், மாவட்ட நிா்வாகிகள் என். காளிராஜன், பொன். ராஜ், கே. ஜீவானந்தம், எஸ்.எம். பாண்டி, நல். மூா்த்தி ஆகியோா் பேசினா். சிஐடியூ நிா்வாகி மனோகரன் நன்றி கூறினாா்.