முகப்பு
ராமநாதபுரம்

கமுதக்குடி அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:25 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆனந்த் என்ற ஆசிரியர்  8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தி வருகிறார். இவர், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
    இது குறித்து 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாயாரிடம் கூறி, பள்ளிக்குச் செல்லமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அம் மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆசிரியர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 
    இதனிடையே, ஆசிரியர் ஆனந்துக்கு ஆதரவாக முருகேஸ்வரி, சகாயலதா, ராஜசுப்புலெட்சுமி ஆகிய ஆசிரியர்கள் மாணவியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பள்ளியில் ஆசிரியர்கள் இரு பிரிவாகச் செயல்பட்டுள்ளனர். இதில், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக 3 ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் 9 பேர் என மொத்தம் 12 பேர் மீது, முருகேஸ்வரி புகார் அளித்துள்ளார். 
    அதேபோல், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் ஆனந்த் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட 3 ஆசிரியர்கள் மீதும் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் ஆனந்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது 
செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.