முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே மணல் லாரி பறிமுதல்;ஓட்டுநர் கைது

கமுதி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 6:22 am IST
பகிர்:

கமுதி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
கமுதி மண்டலமாணிக்கம் அருகே வீரசோழன் விலக்கு சாலை அருகே குண்டாற்றில் லாரியில் மணல் கடத்துவதாக, மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் மதுமதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டலமாணிக்கம் போலீஸார், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் பால்பாண்டியன் மகன் அலெக்ஸ்பாண்டியனை(23) கைது செய்தனர். 
மேல் நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments