எம்எல்ஏ பாஸ் காட்டினாலே போதுமே, எதற்காக டிக்கெட் எடுத்தார் முதல்வர் விஜய்?
எம்எல்ஏ பாஸ் காட்டினாலே போதுமே எதற்காக டிக்கெட் எடுத்தார் முதல்வர் விஜய் என்று மக்கள் கேள்வி.
புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளைத் தொடக்கி வைத்த முதல்வர் ஜோசப் விஜய், பெரம்பூர் செல்லும் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்தது ஏன்? எம்எல்ஏ பாஸ் காட்டினாலே போதுமே என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய், நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
இது தொடர்பான விடியோக்களும் செய்திகளும் இன்று சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், தமிழ்நாட்டில் எம்எல்ஏவாக இருக்கும் ஒருவருக்கு, பேருந்தில் பயணிப்பதற்கான எம்எல்ஏ பாஸ் வழங்கப்படும். அதனைக் காட்டினாலே போதுமே, முதல்வர் விஜய் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை, முதல்வர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து இன்று தொடக்கிவைத்தார்.
இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அந்த பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, நடத்துநரை தனது அருகில் அமரச் சொல்லி அவர்களின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பேருந்துக்குள், ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது செல்போனை எடுத்து சாலையில் நிற்கும் மக்களையும் பேருந்து பயணத்தையும் விடியோ பதிவு செய்துகொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 29ஏ பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், பின்னர், அதே பேருந்தில் தலைமைச் செயலகம் திரும்பினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.