ஜன நாயகன் முன்பதிவு தொடக்கம்! தமிழகத்தில் முதல் காட்சி நேரம் இதுதான்!
ஜன நாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது...
முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக தேர்தலுக்கு முன்பே, ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னைகளால் சிக்கலில் சிக்கிய, வெளியீட்டைக் காண மிகுந்த சிரமத்தைச் சந்தித்தது. மேலும், இணைய தளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தற்போது, தணிக்கை வாரியம் ஜன நாயகனுக்கு ஏ சான்றிதழைக் கொடுத்ததால் இத்திரைப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Advertisement
Advertisement
விஜய் முதல்வராகியிருக்கும் சூழலில், அவரின் கடைசி திரைப்படம் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சில திரைகளில் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத் தமிழகத்தில் காலை 8.40 மணிக்கும் பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Ticket bookings have opened for the movie Jana Nayagan, starring Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.