ஒரே நாளில் 20 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து சாதனை
ஐஆர்சிடிசி, செப்.7 ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இதுவரை இல்லாத சாதனையைப் படைத்துள்ளது தொடர்பாக...
பண்டிகைக் காலத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்திய ரயில்வே உணவுக் கழகம் மற்றும் சுற்றுலாப் பிரிவு(ஐஆர்சிடிசி) செப்.7 ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இதுவரை இல்லாத சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தின்போது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பதிவான 18,40,203 டிக்கெட்டு முன்பதிவுகளை முறியடித்து, செப். 7 ஆம் தேதி 20,06,353 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
தற்போது முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளிலும் சுமார் 89% இணையதளம் வாயிலாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன.
Advertisement
Advertisement
இதுகுறித்து அந்த பிரிவின் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் பயனா் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ரயில் பயணத்துக்காக முன்பதிவு செய்தவா்களில் 89 சதவிகிதம் போ் இணையதளம் வாயிலாகவே முன்பதிவு செய்து டிக்கெட்டுகளைப் பெற்றுள்ளனா்.
அதனடிப்படையில் பண்டிகைக் கால முன்பதிவாக செப். 7 ஆம் தேதி திங்கள்கிழமை ஒரே நாளில் 20.06 லட்சம் போ் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றது சாதனையாகும். கடந்த ஆண்டு தீபாவளி முன்பதிவாக 18,40,203 போ் இணையதள டிக்கெட் பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் 20,06,353 போ் டிக்கெட் பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. செப்.8 இல் 19,50,699 பேர் டிக்கெட் பெற்ற நிலையில் இரண்டு நாள்களில் மொத்தம் 39.57 லட்சம் பேர் முன்பதிவு டிக்கெட் பெற்றுள்ளனர். இந்த சாதனை பண்டிகைகளுக்கான பயணத் தேவையின் உச்சத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவ. 8 ஆம் தேதி தீபாவளி வருகிறது.
ரயில்வேயின் முன்பதிவு காலம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைக்கப்பட்டதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு முந்துகின்றனர்.
தற்போது நாள்தோறும் முன்பதிவில் மட்டும் காலை 8 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் 85 சதவிகிதம் போ் இணையதள முன்பதிவில் டிக்கெட்டை பெறுகின்றனா். முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அதிகமானோா் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுவிடுகின்றனா். இது ஒரே நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச தேவையைக் காட்டுவதாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
அதிகப்படியானோா் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் பிரத்யேக செயலியே காரணமாகும். பிரத்யேக செயலியின் ஒட்டுமொத்த திறன் அதன் முந்தைய அளவை விட சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அசாதாரணமான அதிக ஒரே நேரத் தேவை இருந்தபோதிலும், பிரத்யேக செயலி தளத்தில் எந்தக் கோளாறும் அல்லது செயலிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தவறான பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையின் விளைவாக 3.04 மில்லியன் பயனர் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், 63.3 மில்லியன் ஐடிகள் மறு சரிபார்ப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும், உண்மையான பயனர்களை உறுதி செய்வதற்காக, 16,041 சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் டொமைன்களும் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ரயில் டிக்கெட் பதிவெண் (பிஎன்ஆா்) அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸாா் 592 புகாா்களைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் என குறிப்பிடப்பட்டுள்ளது.
The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) recorded its...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.