FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தீபாவளிக்கு மறுநாள் (நவ. 9) - ரயில் டிக்கெட் முன்பதிவு: கடும் அதிருப்தியில் பயணிகள்!

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக...

10 செப்டம்பர் 2026, 10:07 am IST
ரயில் டிக்கெட் முன்பதிவு - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பிவர ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் முடிந்தது.

ரயில் டிக்கெட் முன்பதிவு வழக்கமாக 60 நாள்களுக்கு முன்பு தொடங்கும். அந்த வகையில் தீபாவளிக்கு ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் வரும் நவ. 8-ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, தீபாவளிக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் அதிக அளவில் ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

சொந்த ஊருக்குச் சென்று பின்னர் திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தீபாவளி மறுநாள் நவ. 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) பயணிப்பதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப். 10) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தன.

தீபாவளி மறுநாள் என்பதால் டிக்கெட் முன்பதிவில் கடும் போட்டி நிலவியது.

பலருக்கும் ஐஆர்சிடிசி கணக்கு லாக் - இன் கணக்கே உள்நுழைய முடியாத நிலை இருந்ததாகக் கூறுகின்றனர். சுமார் 5 நிமிடங்களுக்கு பிறகே கணக்கில் உள்நுழைந்தபோது டிக்கெட்டுகள் எதுவும் இல்லாமல் 'REGRET' நிலைக்குச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். ஏசி டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை, முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிப்படுகின்றனர்.

நவ. 10, செவ்வாய்க்கிழமை பயணிப்பதற்கு நாளை (செப். 11, வெள்ளி) காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Train ticket booking for the day after Diwali: Passengers deeply dissatisfied for login issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments