FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?

தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல விரும்புவோம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து..

48 வினாடிகள் முன்பு
தீபாவளிக்கு ரயில் முன்பதிவு
பகிர்:

இந்த 2026ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருப்பதால், சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தேதிகள் வெளியாகியிருக்கின்றன.

பொதுவாக வார நாள்களில் தீபாவளி பண்டிகை வரும்போது, தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது அதனைத் தொடர்ந்து ஒரு சில நாள்கள் விடுமுறை எடுத்து வார இறுதி வரை அதனை நீட்டித்துக் கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வந்திருப்பதால், வசதிக்கேற்ப தீபாவளிக்கு முன்பு இரண்டு மூன்று அல்லது ஐந்து நாள்கள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல், தீபாவளிக்கு முன்பு ஒரு நாள் தொடங்கி அடுத்த வாரத்தில் விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால், ஒரே நேரத்தில் ஒரே எண்ணிக்கையிலான மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறையும். ஊர்களுக்குச் செல்லவும் திரும்பவும் வசதியான நாள்கள் இருப்பதால் முன்பதிவுக்கு செய்யும்போது பெரிய அளவில் ரயில் டிக்கெட் கிடைப்பதில் சவாலாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி. எனவே, நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ஊருக்குச் செல்ல விரும்புவோர் செப். 6ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை ஊருக்குச் செல்வதாக இருந்தால் செப்.7ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

அதுபோல, ஊருக்குத் திரும்ப திங்கள்கிழமை திரும்புவதாக இருந்தால் செப்.10ஆம் தேதியும், செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு செப்.11ஆம் தேதியும் முன்பதிவு செய்ய வேண்டும்.

ரயில் டிக்கெட் முன்பதிவுகள் காலை 8 மணிக்குத் தொடங்குகின்றன. எனவே, கவனமாக அனைத்து விவரங்களையும் தயாராக வைத்துக் கொண்டு காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

summary

travelling to hometown for Diwali train ticket bookings dates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments