தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு
தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.
இந்த 2026ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருப்பதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டவர்கள், அடுத்து ஊரிலிருந்து திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதலி தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. அதுபோலவே, நாளையும் சென்னைக்கு வரும் விரைவு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே சென்னையை காலி செய்துகொண்டு பலரும் சொந்த ஊர் சென்றுவிடுவார்கள். தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது அதனைத் தொடர்ந்து ஒரு சில நாள்கள் விடுமுறை எடுத்து வார இறுதி வரை அதனை நீட்டித்துக் கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
Advertisement
Advertisement
ஆனால், இந்த ஆண்டு யாரும் விரும்பாத வகையில், ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை. எனவே, ஊருக்குச் செல்வோருக்கான முன்பதிவுகள் கடந்த ஒரு சில நாள்களாக நடைபெற்று வந்தது. நாளை முதல் ஊரிலிருந்து திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிறது.
தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி. தீபாவளி முடிந்து சென்னைக்குத் திரும்ப முன்பதிவு செய்வதற்கு, நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமை திரும்புவதாக இருந்தால் செப்.10ஆம் தேதியும், செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு செப்.11ஆம் தேதியும் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 11ஆம் தேதி சென்னை திரும்ப செப். 12ஆம் தேதி முன்பதிவு நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. அனைத்து விவரங்களுடன் தயாராக இருந்தால் டிக்கெட் முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.
Train ticket booking return journey after Diwali open tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.