தீபாவளிக்கு முந்தைய நாள் ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக...
தீபாவளிக்கு முந்தைய நாள் ரயில் பயண முன்பதிவு இன்று (செப். 8) காலை தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்ததால், பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
நவ. 7 -ஆம் தேதி (சனிக்கிழமை) பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப். 8, செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தீபாவளி திருநாள் நவ. 8 ஆம் தேதி என்பதால் ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சித்த நிலையில், முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
Advertisement
Advertisement
ஏசி டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை, முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிப்படுகின்றனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவை இணையதளத்தில் அறிமுகம் செய்த நிலையில் நேரடியாக ரயில் நிலைய கவுன்டர்களுக்கு வருவோருக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்பது வழக்கமாகிவிட்டது. அதே நேரத்தில் நவீன கைப்பேசி இல்லாதவர்களும், தொழில்நுட்ப முறையை கையாளத் தெரியாதவர்களும் ரயில் நிலைய கவுன்டர்களையே நாடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடையும் நிலையே உள்ளது.
தீபாவளி அன்று (நவ. 7, சனிக்கிழமை) பயணிப்பதற்கு நாளை (செப். 9, புதன்) காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Many passengers were disappointed as train reservations for Diwali were fully booked within just a few minutes of opening today (Sept. 7).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.