தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!
தீபாவளி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது குறித்து...
தீபாவளிக்கான ரயில் பயண முன்பதிவு இன்று(செப்.7) தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்ததால், பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
தெற்கு ரயில்வேயில் வழக்கமாக தீபாவளிக்கு 60 நாள்களுக்கு முன்னரே ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்குவது வழக்கம்.
நடப்பாண்டில் வரும் நவ. 8-ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதால், அதற்கான ரயில் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதன்படி, தீபாவளிக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் அதிக அளவில் ரயில்களில் முன்பதிவு செய்ய ஆா்வமாக இருந்தனர்.
முன்பதிவு செயலி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு செயல்படத் தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே தீபாவளிக்கான முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் கிடைக்காமல் போனது.
இந்த நிலையில் நவ. 6-ஆம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (செப். 7) தொடங்கிய நிலையில், அவர்களுக்கான முன்பதிவும் சில நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது.
Many were disappointed as train reservations for Diwali were fully booked within minutes of opening today (Sept. 7).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.