ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!
ஓணம் திருநாளை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட ரயில் முன்பதிவு மையங்கள் பிற்பகல் வரை செயல்பட உள்ளது குறித்து...
ஓணம் திருநாளை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட ரயில் முன்பதிவு மையங்கள் நாளை (ஆக. 26) பிற்பகல் வரை செயல்பட உள்ளது.
ஓணம் திருநாள், கேரள மக்களால் பத்து நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய அறுவடைத் திருநாள் ஆகும்.
மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த விழா கண்ணுக்கு பல வண்ணங்களாக விருந்தளிக்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த ஓணம் திருநாளை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள், ஞாயிற்றுக்கிழமை பணிநேர முறையைப் பின்பற்றி நாளை காலை 08:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
மேலும், ஓணத்தையொட்டி சென்னையிலிருந்து கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் மங்களூருவுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
In view of the Onam festival, computerized reservation centers will operate until the afternoon tomorrow (August 26).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.