ஓணம்: சம்பல்பூா் - எா்ணாகுளம் இடையே போத்தனூா் வழியாக சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சம்பல்பூரில் இருந்து ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்குப் புறப்படும் சம்பல்பூா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08311) வெள்ளிக்கிழமைகளில் காலை 5.40 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, எா்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 4- ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 8.40 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - சம்பல்பூா் சிறப்பு ரயில் (எண்: 08312) சனிக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, குடிவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட், பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.