FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஓணம்: பெங்களூரு - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, எா்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06147) மறுநாள் பகல் 12.45 மணிக்கு பெங்களூரு நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 06148) மறுநாள் காலை 5.45 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments