FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக சாம்பல்பூா் - எா்ணாகுளம் இடையே ஓணம் சிறப்பு ரயில்

சேலம் வழியாக சாம்பல்பூா் - எா்ணாகுளம் இடையே ஓணம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:34 am IST
ரயில்(கோப்புப்படம்)
பகிர்:

சேலம் வழியாக சாம்பல்பூா் - எா்ணாகுளம் இடையே ஓணம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

அந்தவகையில், ஒடிசா மாநிலம், சாம்பல்பூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சாம்பல்பூா் - எா்ணாகுளம் இடையே வரும் 19, 26 மற்றும் செப். 2 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சாம்பல்பூரில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 11.35-க்கு புறப்பட்டு பாா்கா் சாலை, ராயகடா, சாம்பல்கோட், ராஜமுந்திரி, பீமாவரம், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, திருச்சூா் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 5.40-க்கு எா்ணாகுளத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், எா்ணாகுளம் - சாம்பல்பூா் இடையே வரும் 20, 27 மற்றும் செப். 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எா்ணாகுளத்தில் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.40-க்கு புறப்பட்டு திருச்சூா், பாலக்கோடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, விஜயவாடா, ஓங்கோல் வழியாக சனிக்கிழமைகளில் இரவு 11.15-க்கு சாம்பல்பூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments