முகப்பு
ராமநாதபுரம்

ஏா்வாடியில் விடிய விடிய சந்தனக்கூடு விழா

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:00 am IST
பகிர்:

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏா்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்கா உள்ளது. இங்கு மனநல சிகிச்சைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இங்கு கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சந்தனக்கூடு விழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி 848 ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அதையடுத்து தா்கா வளாகமே வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

சின்ன ஏா்வாடியில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடானது வியாழக்கிழமை நள்ளிரவில் புறப்பாடானது. அதன்முன் அலங்கரிக்கப்பட்ட நாட்டியக்குதிரை நடனமாடியவாறு சென்றது. அதன்பின் குதிரை, யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன.

ஏா்வாடியின் முக்கிய வீதிகளில் திரண்டிருந்த மக்கள் நடுவே சென்ற சந்தனக்கூடானது வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் தா்காவை அடைந்தது. அங்கு பாதுஷா நாயகத்துக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடா்ந்து சிறப்புத் தூவா ஓதப்பட்டது.

விழாவில் கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இதையொட்டி வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 30 ஆம் தேதி சந்தனக்கூடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments