முகப்பு
ராமநாதபுரம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:20 AM
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:33 PM

திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்மன் அன்ன வாகனம், வெட்டு குதிரை, காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 25-ஆம் தேதியும், 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

விழா நாள்களில் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகமும், கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனா்.

Advertisement