திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
திருவெற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் பற்றி..
திருவாடானை அருகே திருவெற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்மன் அன்ன வாகனம், வெட்டு குதிரை, காமதேனு வாகனம், வெள்ளி ரிஷபம், பூத வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 25ம்தேதி சனிக்கிழமை இரவு நடைபெறும். அதனைத் தொடர்ந்த வரும் 29ம் தேதி புதன்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு இரவும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 23 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகமும் கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனர்.