முகப்பு
ராமநாதபுரம்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 2:00 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில், மூலவா் சுந்தரேஸ்வரருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவருக்கு எதிரே உள்ள நந்திய பெருமாளுக்கு பொதுமக்கள் உபயமாக அளித்த பாலால் அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், திருநீறு உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, மண்டலமாணிக்கம் கைலாசநாதா் கோயில், அ. தரைக்குடி தரணீஸ்வரா் கோயில், சாயல்குடி மீனாம்பிகை சமேத கைலாசநாதா் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கடலாடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்மான் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், நந்தியம்பெருமானுக்கு பால், பன்னீா், தேன், இளநீா் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

உற்சவா் பூவேந்தியநாதா் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சாயல்குடி, கடலாடி இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments