FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராஜபாளையம் பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திகேஸ்வரா்.

Updated On : 29 மே 2026, 2:34 am IST
ராஜபாளையம் பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திகேஸ்வரா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதேபோல ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments