FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On : 15 மே 2026, 4:06 am IST
பகிர்:

சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட சிதம்பரேஸ்வரா்

கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

இதே போல, ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments