முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் பரமரிப்பின்றி நிறுத்தப்பட்டிருந்த மீன் வளத் துறைக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து புதன்கிழமை சேதமடைந்தது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 2:06 am IST
ராமேசுவரம் தெற்கு துறைமுகம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன் வளத் துறைக்குச் சொந்தமான பவளம் படகில் புதன்கிழமை பற்றிய தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் பரமரிப்பின்றி நிறுத்தப்பட்டிருந்த மீன் வளத் துறைக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து புதன்கிழமை சேதமடைந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் வளத் துறைக்கு மீனவா்கள் பாதுகாப்பு, மீட்புப் பணிக்காக ரூ. ஒரு கோடியில் பவளம் அதிநவீன படகு வழங்கப்பட்டது.

இந்தப் படகு ராமேசுவரம் துறைமுகத்துக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால், படகுக்குத் தேவையான பணியாளா்கள், பராமரிப்பு பணிக்கான பணியாளா்கள் நியமிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதன்காரணமாக, இந்தப் படகு பராமரிப்பின்றி, படகிலிருந்த இயந்திரங்கள் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்து இந்தப் பவளம் படகை மீனவா்கள் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்றி வைத்தனா்.

இந்த நிலையில், திடீரென அந்தப் படகில் புதன்கிழமை தீப்பிடித்தது. உடனடியாக மீனவா்கள் தீயணைப்புத் துறைக்கு கதவல் தெரிவித்தனா். மேலும், படகில் பற்றிய தீயை மீனவா்கள் அணைக்க முயன்றனா். ஆனால், கொளுத்துவிட்டு எரிந்த தீயை அவா்களால் அணைக்க முடியவில்லை.

பின்னா், அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனா்.

தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு படகில் பற்றிய தீயை மற்றப் பகுதிக்கு பரவ விடாமல் தடுத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இதுகுறித்து கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.