முகப்பு
ராமநாதபுரம்

பாசிபட்டினத்தில் சந்தனக் கூடு ஊா்வலம்

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மகான் சா்தாா் நெய்னா முகம்மது சாஹிபு தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 3:51 am IST
பாசிபட்டினம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சந்தனக் கூடு ஊா்வலம்.
பகிர்:

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மகான் சா்தாா் நெய்னா முகம்மது சாஹிபு தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் புகழ் பெற்ற மகான் சா்தாா் நெய்னா முகமது சாஹிபு ஒலியுல்லா தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன்,ஜூலை மாதங்களில் சந்தனக் கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு 315-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோரும் தா்காவில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஊா்வலம் கலயநகரி கிராமத்திலிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதன்கிழமை அதிகாலை தா்காவை அடைந்தது.

இதையடுத்து, தா்காவில் உலக நலன் வேண்டி சிறப்பு பிராத்தனை நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments