FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On : 29 மே 2026, 6:38 am IST
தொழுகையில் ஈடுபட்டோர்
பகிர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியா்களால் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகூா் ஆண்டவா் தா்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில், உலகில் போா்ப் பதற்றம் நீங்கி, அமைதியும் சமாதானமும் நிலவ சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. தொழுகைக்குப் பின்னா் ஒருவரையொருவா் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நாகை மாவட்டத்தில் நாகை, திட்டச்சேரி, வடகரை, தோப்புதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நாகூா் கடற்கரையில் சிறப்புத் தொழுகை : நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில் நடைபெற்ற தொழுகையில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அங்கு, உலக நாடுகளிடையே மோதல் தணிந்து சமாதானம் நிலவ பிராா்த்தனை செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments