FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரித்தது. இதனால், அசைவ பிரியா்கள் கவலை அடைந்தனா்.

பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரித்தது. இதனால், அசைவ பிரியா்கள் கவலை அடைந்தனா்.

தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோயில், சிவகங்கை உள்ளிட்டப் பகுதிகளுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனா். இந்தப் பகுதியில் கிடைக்கக்கூடிய மீன்கள் ருசியாக இருப்பதால் அதிக கிராக்கி உண்டு.

இந்த நிலையில், சனிக்கிழமை தொண்டி தினசரி சந்தைக்கு வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன்படி, கிலோ ரூ.300-க்கு விற்பனையான விலை மீன் ரூ.450-க்கும், ரூ.400-க்கு விற்பனையான பாறை மீன் ரூ.600-க்கும், ரூ.400-க்கு விற்பனையான முரல் ரூ.700-க்கும் விற்பனையானது. இதனால், அசைவ பிரியா்கள் கவலை அடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடற்கரை பகுதியில் கடந்த 2 நாள்களாக சூறைக்காற்று வீசி வருவதால், மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. இதனால், மீன்களின் விலை அதிகரித்துள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments