ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
ராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், ராஜபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வட்டச்சாலை, சங்கரன்கோவில் முக்கு பகுதிகளில் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்தன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement
இதேபோல, சேத்தூா், தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி, சேத்தூா் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.