ஆரணி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஆரணி நகரம், சேவூா், குன்னத்தூா், எஸ்.வி.நகரம், வடுகசாத்து, நெசல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும், ஆரணி - இரும்பேடு சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது (படம்). இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினா் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், மழை காரணமாக நீண்ட நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.